சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று முன் தினம் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,480-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dropped-what-is-the-situation-today-2




