பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாடு நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினார்கள். பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாடு இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல பிரிக்ஸ். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ள தெற்குலக நாடுகளுக்கு இந்தியா உதவும்" என்று தெரிவித்திருக்கிறார். BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/pm-modi-speech-at-brics-summit-2026



