கோவை, 132 டெண்டர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்த லுக்கு முன்பு 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. ஆனால் 'சி சேங்சன்', அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை. இதனால் மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால், தடுப்புச்சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 132 டெண்டர் களில் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனமாக இருக்கிறது. கவுன்சிலர்கள் இதேபோன்று மாநகர் முழுவதும் பூங்கா கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறும்போது, கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன்பு நாங்கள் மாநகராட்சி பொறியாளர்களுடன் இணைந்து வார்டு திட்ட பணிகளை ஆய்வு செய்தோம். அளவீடு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்தோம். நிர்வாக அனுமதி பெற்ற பிறகு அந்த பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. அதே நேரத்தில் சில பணிகளை ரத்து செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர். ஆட்சி மாறிய பிறகு அந்த திட்ட பணிகளின் விவரம் தெரியவில்லை. பணிகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரத்து செய்ய வேண்டும் என்றனர். நிதி நிலை அடிப்படையில். ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், எங்களுக்கு கடந்த கால திட்ட பணிகள் ரத்து தொடர்பாக தகவல் தரவில்லை. அடுத்து மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்ய போகிறது என தெரியாது என்றனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, மாநகராட்சியின் நிதி நிலை அடிப்படையில் இந்த டெண்டர்கள் நிலுவையில் உள் ளன. நிதி நிலைமைக்கு தகுந்தவாறும், அத்தியாவசிய பணி அடிப்படையிலும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-cancel-132-tenders-in-coimbatore-corporation




