கூடலூர், கூடலூரில் 2 பேரை கொன்ற ஆண்புலி கூண்டில் சிக்கியது. இதைத்தொடர்ந்து வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 2 பேரை புலி கடித்துக் கொன்றதால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேடுதல் வேட்டை இதையடுத்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 150 வனத்துறையினர் உடனடியாக புலி தேடுதல் வேட்டையை தொடங்கினர். மேலும் லாரஸ்டன், பாரம், தெய்வ மலை மற்றும் ஹலாலா எஸ்டேட் உள்பட மொத்தம் 305 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் 14 இடங்களில் இறைச்சி துண்டுகளுடன் கூடிய கூண்டுகள் இலை, தழைகளால் மறைத்து வைக்கப்பட்டது. கூண்டில் சிக்கியது இதற்கிடையே கூடலூர் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் சிறுத்தைகளும் சிக்கி வந்தது. ஆனால் புலி சிக்காமல் இருந்ததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சி மேல் கூடலூர் பகுதியில் உள்ள ஹலாலா எஸ்டேட் பகுதியில் வனத்துறை சார்பில் வைத்திருந்த கூண்டில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆட்கொல்லி ஆண் புலி சிக்கியது. வண்டலூர் இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது புலியை வாகனத்தில் ஏற்றி முதுமலை கார்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர், முதுமலையிலிருந்து சென்னை வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு மைசூரு வழியாக வனத்துறையினர் புலியை கொண்டு சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-male-tiger-that-killed-two-people-in-gudalur-was-caught-in-a-cage



