சென்னை, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அறிவித்துள்ளது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தி வருகிறது. நவம்பர் 1ம் தேதி வருடாந்திர தேர்வு அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என டி.என். பி.ஸ்.சி. தலைவர் எஸ். கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் (டி.என்.பி.எஸ்.சி.) (TNPSC) அறிவித்துள்ளது. UPI மூலமாக தேர்வு கட்டணம் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIΑ பணிகள்) க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதிய அரசு அரசுதுறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Link: — TNPSC (@TNPSC_Office) August 11, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-group-2-and-group-2a-exams-be-held-tnpsc-has-announced-the-dates




