மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட், நாதக ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுராந்தகத்தில் முதல் அமைச்சர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசாரம் மேற்கொண்டார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். நேற்று சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். கோவிலில் வழிபாடு இந்த நிலையில் மதுராந்தகத்தில் நாளை மீண்டும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் 45 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ செல்ல முதல் அமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மதியம் 2 மணிக்கு மதுராந்தகம் செல்லும் விஜய், வழியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு செல்கிறார். அங்கு பராசக்தியை வழிபட்ட பிறகு, பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரோடு ஷோ செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். விஜய்க்கு வழிநெடுக தவெகவினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-to-offer-prayers-at-melmaruvathur-temple-tomorrow-plans-for-a-45-km-roadshow-in-maduranthakam




