நாளை தனுஷின் பிறந்த நாள். முன்னதாக அவர் தனது பிறந்த நாள் ஸ்பெஷலாக ரசிகர் மன்ற விழாவில் பேசியது வைரலாகி வருகிறது. 'ராயன்', 'கேப்டன் மில்லர்' படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த விமர்சன சர்ச்சை உட்பட பலவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேசியிருந்தார். தனுஷின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் சென்னை மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக் கல்லூரியில் தனுஷின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ரசிகர் மன்றம் சார்பில் பேனாவும் பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தனுஷின் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விழா நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில் மும்பை, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தனுஷின் ரசிகர்கள் படையெடுத்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்டோக்களும் வழங்கினார்கள். ரசிகர்கள் ரத்த தானமும் செய்திருந்தனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து விசாரித்தோம். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் இப்போது 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 55வது படமாக உருவாகி வருகிறது. இதில் அவருடன் மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய்பல்லவி எனப் பலரும் நடித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மம்மூட்டி - தனுஷ் தொடர்பான ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை படப்பிடிப்புக்கு பிரேக் விடுகிறார்கள் எனத் தகவல். படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது. அதன் புரொமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது படத்தின் ஓப்பனிங் பாடல் என்றும், சென்னை ரெட் ஹில்ஸ் அருகே 1500 டான்சர்கள் காம்பினேஷனுடன் இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஓப்பனிங் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். இது தவிர கடந்த இரண்டு மாதங்களாக சென்னை சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் மதிய உணவு அன்னதானமாக (சிக்கன் பிரியாணி) வழங்கப்பட்டு வருகிறது. தனுஷின் நட்பு வட்டத்தில் உள்ள சமுத்திரக்கனி, வேல்ராஜ் எனப் பலரும் இந்த அன்னதான திட்டத்தைத் தொடங்கி வைத்து வந்தனர். இந்நிலையில் நாளை மட்டும் மூன்று வேளை அன்னதானம் செய்ய உள்ளதாகவும் சொல்கிறார்கள். நாளை தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தகவல். "90% பேர் விமர்சிக்குறாங்க, அன்னைக்கு 10% பேர் கூட."- தேசிய விருது விமர்சனத்துக்கு தனுஷ் பதிலடி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/dhanushs-birthday-special-updates-and-his-om-movie-singe-release-exlusive-update



