மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்ராவில் உள்ள அம்ருத் நகர் தர்கா சாலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஜிப்ரான் இம்ரான் கான் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பர்தாம் இப்ராகிம் மன் சூரி(வயது24) என்ற வாலிபர், தனக்கு சிகரெட் வாங்கவேண்டும் என்றும், அதற்கு 50 ரூபாய் பணம் தருமாறும் ஜிப்ரானிடம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு ஜிப்ரான் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மன்சூரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஜிப்ரானை சரமாரியாக குத்தினார். அப்போது அதை தடுக்க வந்த எஸ்கலென் நிசார் காசி(19) என்ற மற்றொரு வாலிபரையும் அவர் கத்தியால் குத்தினார். இந்த பயங்கர தாக்குதலில் 2 பேரின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மும்ரா போலீசார், மன்சூரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வாலிபர் மன்சூரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-refusal-to-give-50-for-cigarettes-two-stabbed




