ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க இருந்த சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாற்று இடத்தை உடனடியாக கண்டுபிடித்து திட்டத்தை செயல்படுத்த தொழில் துறையி னர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து விமான நிலை யத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொழில் துறை மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது, விமான நிலையம் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை (ஓ.டி.ஏ.) பரந்தூருக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்தை ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுப் பெற்று அதில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- மதுரவாயல் இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 5-வது முனையம் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதை தாம்பரம்- மதுரவாயல் சாலையுடன் இணைக்கும் வகையில் அணுகு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் ஆய்வுக்கான அனுமதிகளை நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட துறைகள் விரைவாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஜி.எஸ்.டி. சாலை மட்டுமின்றி தாம்பரம்-மதுரவாயல் சாலையில் இருந்தும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வருவோரும் பயன்படுத்தி நேரடியாக விமான நிலையம் வர முடியும். 750 ஏக்கர் நிலம் சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, 650 முதல் 750 ஏக்கரில் அமைந் துள்ளது. இந்த இடத்தை தமிழக அரசு, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து கேட்டுப் பெற்று, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இது வரை 1,800 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் ஏக்க ரில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி அகாடமியை அதிநவீன உள்கட்ட மைப்பு வசதிகளுடன் தமிழக அரசு அமைத்து தரும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தின் 2-வது ஓடு பாதையை முழுவதுமாக பயன்படுத்தும் சூழல் ஏற்படும். விமானங்களின் இயக்கமும் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆலோ சனை நடந்து வருகிறது.இவ்வாறு தொழில் துறை அதிகாரிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-army-officers-training-centre-being-relocated-to-parandur




