திருவண்ணாமலை, மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்ற பாமணி ரெயில், ரெயில்வே கேட் பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நடுவழியில் நின்ற ரெயில் மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி நோக்கி சென்ற பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலையில், அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்றது. இதையொட்டி ரெயில்வே கேட் இருபுறமும் சாலை இரும்பு தடுப்பால் மூடப்பட்டது. அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் வழியாக சென்ற ரெயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதைய டுத்து ரெயில்வே துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு தொழில் நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்தனர். வாகன ஓட்டிகள் அவதி பின்னர் சுமார் 15 நிமிடம் காலதாமதமாக அந்த இடத்தில் இருந்து பாமணி ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் நின்றதால் ரெயில்வே கேட் அருகே வாகன ஓட்டிகள் அணிவகுத்து நின்ற னர். அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ரெயில் அங்கிருந்து சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience




