சென்னை, புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது. புதிய தலைமைச்செயலகம் தமிழக அரசின் புதிய தலைமைச்செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடலும், கடல் சார்ந்த நெய்தல் இடமான அந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டி னால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளது. ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. மீனவர்களுக்கான இடம் இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவ ரான பாரதி கூறியதாவது:- புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ள இடமே காலம். காலமாக மீனவர்களுக்கானதுதான். இது கடல்சார் நிலம். அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் அனை வருக்கும் இது தெரியும். எங்களது பூர்வீக இடத்தில் மீனவர்களுக்கான குடியிருப்புகள் தான் கட்டி தர வேண்டும். எங்கள் இடத்தை திருப்பி தர வேண்டும். மாற்றாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வைக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் கட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? பொதுவாக கோட்டையில் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போதே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல விட மாட்டார்கள். இப்போது புதிய தலைமைச்செயலகம் வேறு கட்டி விட்டால், நாங்கள் வீட்டை விட்டு கூட வர முடியாது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து எங்களை சுதந்திரமாக நடமாட கூட விட மாட்டார்கள். மீன்பிடிக்கவும் செல்ல முடியாது. 12 மீனவ கிராமங்கள் எதிர்ப்பு ஏற்கனவே சாந்தோம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. 2023-ம் ஆண்டில் இருந்தே எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருப்பு வேண்டும் என்று சொல்லி வருகிறோம். தற்போது அமைச்சராக இருக்கும் வெங்கடரமணன் கூட, தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தார். எங்களுக்கு சொந்தமான இடத்தை பெற்று தருவோம் என்று தெரிவித்தார். இப் போது அது குறித்து பேச மறுக்கிறார். புதிய தலைமைச்செயலக திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுவது முள்ளிகுப்பம், முள்ளிமாந கர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம். இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும். முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக்குடும் பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்னவும் பயன்படுத்தும் கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும். போராட்டம் நடத்த முடிவு அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எங்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-the-new-headquarters




