'மண்டாடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " 'மண்டாடி' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 10 நாட்களை கடந்துவிட்டது என நினைக்கிறேன். ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக 1 வருடத்துக்கும் மேல் கஷ்டப்பட்டிருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்தப் படம். மண்டாடி ஒவ்வொரு ஊராக சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். ‘பரோட்டா சூரி’ என ஒன்று இல்லவே இல்லை. சூரி தான் என்னுடைய பெயர். மக்களாக கொடுத்தது தான் பரோட்டா சூரி என்ற பெயர். ஆரம்பத்திலிருந்து படங்களில் என்னுடைய பெயர் சூரி தான். நகைச்சுவை நடிகராக இருந்து இன்று கதையின் நாயகனாக மாறியிருக்கிறேன். "துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி மக்கள் தான் இந்த இடத்தில் கொண்டு வந்து என்னை அமர்த்தியிருக்கிறார்கள். அதற்காக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னை இதுவரைக் கையை பிடித்து அழைத்து வந்த அத்தனை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்றிருக்கிறார். தொடர்ந்து ஜேசன் சஞ்சய் சூரியை வைத்து படம் எடுப்பேன் என்று 'சிக்மா' பட விழாவில் பேசியிருந்தார். ஜேசன் சஞ்சய் இதுதொடர்பாக சூரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பெரிய ஸ்டாரோட பையன் என்று நமக்குதான் தோன்றும். ஆனால் ஜேசன் சஞ்சய் அப்படி காண்பித்து கொள்ளமாட்டார். அவரிடம் ஒரு தெளிவு, பணிவு, நிதானம் இருக்கிறது. நிச்சயம் அவர் ஒரு நல்ல இயக்குநராக வருவார். அவர் சொன்னமாதிரி எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படம் நடித்தால் சந்தோஷமாக இருக்கும் " என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/actor-soori-about-his-name-and-jason-sanjay




