தஞ்சாவூர், தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் தஞ்சை மாவட்டதை சேர்ந்த வேலை தேடும் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். சுய விவர குறிப்பு. கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow




