சென்னை, வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,887 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால் 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 14,141 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால், பல்வேறு மாவட்டங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரிகள் இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 4,887 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஏரிகள் அதிக அளவில் வறண்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயம் மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் தேவையையும் சமாளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. குடிநீர் தேவை இதற்கிடையே, கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் நிலுவை 78.9 டி.எம்.சி அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. குறிப்பாக சென்னை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-shortage-looms-in-tamil-nadu-lakes-dry-up-in-14-districts




