இந்திய ரெயில்வே கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்திய ரெயில்வே சார்பில் மொத்தம் 14.13 கோடி டன் சரக்குகளைக் கையாளப் பட்டது. இது கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 9 சதவீத அசாத்திய வளர்ச்சியாகும். இந்திய பொருளாதாரத்தில் ரெயில்வே பங்கு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதா ரத்தையும் இணைக்கும் ரத்த ஓட்டமாக இந்திய ரெயில்வே திகழ்கிறது. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வாழும் கோடிக்கணக்கான மக்களை ஒன் றிணைப்பதுடன், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்க ளைத் தடையின்றி வினியோகித்து, இந்தியாவின் அசுரப் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தரவுகளின் படி, நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதிலும் இந்திய ரெயில்வே வலுவான செயல்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. 14 கோடி டன் சரக்குகள் கடந்த ஜூலை மாதத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து மூலமாக கையாண்ட சரக்குகள் விவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித் துள்ளது. அதன்படி சரக்கு கையாளுதலில் 9 சதவீத வளர்ச்சியையும், கணிசமான வருவாய் உயர்வையும் பதிவு செய்து இந்திய ரெயில்வேத் துறை அசத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்திய ரெயில்வே சார்பில் மொத்தம் 14.13 கோடி டன் சரக்குகளைக் கையாளப் பட்டது. இது கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 9 சதவீத அசாத்திய வளர்ச்சியாகும். சரக்கு போக்குவரத்து அதிகரித்ததன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.1,137 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீத வருவாய் வளர்ச்சியாகும். இரும்புத் தாது போக்குவரத்து 22.2 சதவீதம் அளவிலும், உரங்கள் 12 சதவீதம் அளவிலும், உணவு தானியங்கள் மற்றும் நிலக்கரி போக்குவரத்து தலா 11.5 சதவீதமும் அதிகரித்துள்ளன. மேலும், மின் உற்பத்தி நிலையங்க ளுக்கான உள்நாட்டு நிலக்கரி வினியோகம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/indian-railways-sets-a-record-by-handling-140-million-tonnes-of-freight-in-july




