திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மாலினி என்பவருக்கு சொந்தமான மதுரா என்ற நகைக்கடையில் கொம்புகாரன்பட்டியை சேர்ந்த பாரதிராஜா மகன் பிரபு(34) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடையில் இருந்து பிரபு சிறிது சிறிதாக 41 பவுன் தங்க நகையை திருடியதாக கடையின் உரிமையாளர் மாலினி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபுவை கைது செய்து அவரிடம் இருந்து 41 பவுன் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/employee-arrested-for-stealing-41-sovereigns-of-gold-jewelry-from-a-shop-in-nilakottai




