மதுரை, மதுரை அருகே மீனாட்சிபுரம் (மாங்குளம்) கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சமணர் படுகைகளுக்கு தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வு அங்குள்ள சங்க கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமண முனிவர்களின் படுக்கை அமைப்பை துல்லியமாக ஆராய்வதற்காக, அமைச்சர் ராஜ்மோகன் அவரே அந்த கற்படுகையில் படுத்துக்கொண்டு வரலாற்று எழுத்துக்களை உற்று நோக்கி ஆய்வு செய்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதிகாரிகளுக்கு உத்தரவு தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-inspects-ancient-jain-beds-madurai




