சென்னை, முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மெகா முறைகேடுகள் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தவெக அரசின் நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ரூ.42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில், மெகா முறைகேடுகள் அரங்கேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது, முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது. இந்த டெண்டர் தொடர்பாகப் சில சந்தேகங்கள் எழுகின்றன. அதன்படி: 1) ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுப்பது ஏன்? 2) ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருந்தும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் "சிறப்பு நிபந்தனைகள்" விதிக்கப்பட்டது ஏன்? டெண்டர்களை ரத்து செய்க போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளும், சில ஆதிக்கம் செலுத்தும் ஒப்பந்ததாரர்களும் கைகோர்த்து 'சிண்டிகேட்' அமைத்து மற்றவர்களைத் தடுப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியவை. எனவே முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு முறைகேடுகள் நடந்தது உறுதியானால், அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்துவிட்டு, கூடுதல் கால அவகாசத்துடன் முறையான மறு டெண்டர் விட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-rs-42-crore-water-resources-department-tender-is-this-what-administrative-change-looks-like-nainar-nagendran




