மொகாதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் தன்னாட்சி மாகாணமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாகாணத்தில் அதிக அளவில் கடற்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதனிடையே, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் சோமாலியாவுக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. பலாவு நாட்டு கொடியுடன் சென்ற கப்பலில் 17 மாலுமிகள் பயணம் செய்தனர். ஏப்ரல் 21ம் தேதி சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் அருகே சென்றுபோது கச்சா எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இந்திய மாலுமி உள்பட 5 பேர் பலி இந்நிலையில், கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியா கடற்படையினர் இன்று மீட்டனர். ஆனால், மீட்பு நடவடிக்கையின்போது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி உள்பட 5 மாலுமிகள் உயிரிழந்தனர். மாலுமிகளில் ஒருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டவர், 3 பாகிஸ்தான் நாட்டவர்கள் என 5 மாலுமிகள் உயிரிழந்தனர். எஞ்சிய 12 மாலுமிகளும், கச்சா எண்ணெய் கப்பலும் மீட்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/somalia-pirates-kill-five-including-indian-sailor-shocking-incident



