காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனத்தின் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை ஆதீனம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மதுரை ஆதீனம் கோவிலுக்கு சென்றால் அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் வரக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் ஆண்டவன் பெயரில் பதவி ஏற்றிருப்பதும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் முதலமைச்சர் பெயரை சொல்லுங்கள் என்று விஜய் கூறியிருப்பது தனக்கு பிடித்துள்ளது. தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி. எனது ஆசி தவெகவுக்கே. இதுவரை இருந்த முதலமைச்சர்களைவிட விஜய் போன்ற அற்புதமான முதலமைச்சரை நான் பார்த்ததில்லை. வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்”என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-magnificent-it-will-win-the-by-election-madurai-adheenams-interview




