சென்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக, எங்கள் திரைப்படமான 'ஓம்' படத்தின் வெளியீட்டைப் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். ‘ஓம்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஓம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. வெளியீட்டு தேதி மாற்றமா? இந்நிலையில், ‘ஓம்’ படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை தனுஷ் தனது சமூக வலைதளப் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் படத்துக்கு மரியாதை அந்த பதிவில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு விஷயமாகும். பல ஆண்டுகளாக நாம் அனைவரும் போற்றி வணங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம், எங்கள் படத்திற்கு முந்தைய நாளான அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அவர் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக, எங்கள் திரைப்படமான 'ஓம்' படத்தின் வெளியீட்டைப் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளி வெளியீடும் இல்லை அதே வேளையில், இந்த ஆண்டு தீபாவளிக்கும் நாங்கள் வரப்போவதில்லை; ஏனெனில், அதே தேதியில் சூர்யா அவர்களின் திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாகப் பார்த்தால், அவர்களே தங்கள் வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்தார்கள். பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலுடனும், சினிமாவின் மற்றும் இத்துறையின் நலனைக் கருத்தில் கொண்டும் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் புதிய வெளியீட்டுத் தேதியை மிக விரைவில் அறிவிப்போம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-postpones-the-release-date-of-the-movie-om-is-this-the-reason




