Article complet
திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக பெண்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி... கடந்த வாரம் அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. protest பேச்சுவார்த்தைக்குப் பின்பு அந்தக் கடையை திறப்பதா அல்லது முழுமையாக மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், கடந்த ஒரு வார காலமாக அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் எந்த பாதிப்பும் இல்லை. அந்தக் கடையை நம்பி அதன் அருகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், இந்தக் கடைகளில் தங்களுக்குத் தேவையான சைட் டிஷ் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வார்கள். கடை மூடப்பட்டிருப்பதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முழுமையாக கடையை மூடினால் அதை நம்பி வியாபாரம் செய்யும் தங்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அங்கு கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். protest அந்தக் கடையினை மூடாமல் தொடர்ச்சியாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தக் கடையால் எந்தவித பாதிப்பும் பொது மக்களுக்கு ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம், 'டாஸ்மாக் கடையை மூட வேண்டும்' என்று அந்தப் பகுதி பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது வியாபாரிகள், 'அந்தக் கடையை மூடக் கூடாது' என்று போராட்டம் நடத்தியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



