மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு காவலரின் பொறுப்பையும் மையமாகக் கொண்ட சமூக அக்கறை கொண்ட படம் – ‘லெனின் பாண்டியன்’. விவசாயியான கங்கை அமரன், மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தும் பெண் அதிகாரி படுகொலை செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நாடும் கங்கை அமரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்படுகிறது. அதன் பேரில் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ள காவலர் தர்ஷன் கணேசன் கங்கை அமரனுக்கு பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் தர்ஷன் கணேசன் வழக்கின் தீவிரத்தை உணர்ந்து ஒரு கட்டத்தில் தனது பொறுப்பை உணர்ந்து கொள்கிறார். எதிரிகளிடமிருந்து கங்கை அமரன் பாதுகாக்க தொடங்குகிறார். இந்த சூழ்நிலையில் இருவருக்கும் பிரச்சனைகள் உருவாகிறது அந்தப் பிரச்சினைகளில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? கங்கை அமரனை தர்ஷன் கணேசன் மீட்டாரா? என்பதே மீதி கதை. கங்கை அமரனும், ரோஜாவும் அனுபவ நடிப்பால் கலக்கி இருக்கிறார்கள் எதார்த்த நடிப்பை கொட்டி ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்கள் இருவரிடையே காதலும் எமோஷனல் காட்சிகளும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. முதல் படத்திலிருந்து முத்திரை பதித்திருக்கிறார் தர்ஷன் கணேசன் அழுத்தமான நடிப்பால் படம் முழுக்க அலங்கரித்து இருக்கிறார். சிவாஜி கணேசனின் பேரன் என்பதை நிச்சயமாக நிரூபித்து விட்டார். போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை. எட்வின் சாகே ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. எதார்த்த திரைக்கதை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி எல்லோரும் ரசிக்க கூடிய ஒரு கிராமத்து கதையாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் டிடி பாலச்சந்திரன். கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/movie-review/lenin-pandian-cinema-review




