சென்னை, போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் மாநில அளவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, அனைவரையும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுத்து ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போலீஸ் சீருடையில் வந்த சிறுவன் அதில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான சந்தீஷ் ஐ.பி.எஸ்.-ம் ஒருவர். பதக்கம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பள்ளி செல்லும் அவருடைய மகன் ஷன் முக் (4) உடன் வந்திருந்தார். போலீஸ் சீருடையில் வந்த அந்த சிறுவன், முதல்-அமைச்சர் விஜயை பார்த்தவுடன், தானும் மேடைக்கு வருவதாக தந்தையிடம் அடம்பிடித்தார். முதல்-அமைச்சருக்கு சிறுவன் சல்யூட் மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி.சந்தீஷிடம் விசாரித்த முதல்-அமைச்சர் விஜய், அவருடைய மகனை கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய அவர், பின்னர் கீழே இறக்கிவிட்டார். அந்த சிறுவனும் ஏனைய போலீஸ் அதிகாரிகள் போல், முதல்-அமைச்சர் விஜய்க்கு நேர் எதிரில் நின்று அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு சிரித்துக்கொண்டே முதல்-அமைச்சர் விஜய்யும் சல்யூட் அடித்தார். அதன்பின்னர், சிறுவன் உற்சாகமாக தனது தந்தையுடன் மேடையை விட்டு கீழே இறங்கினார். குட்டி போலீஸ் மேடை ஏறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-little-police-officer-who-impressed-chief-minister-vijay-who-is-he




