சென்னை, கேரளாவில் நடந்த படப்பிடிப்பின்போது நடன மாடிக்கொண்டிருந்த ராஷ்மிகா தவறி கீழே விழுந்ததில் தொடை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வரும் ராஷ்மிகா, கட்டாய ஓய்வும் தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். 'மைசா' படத்தில் ராஷ்மிகா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் 'மைசா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான 'மைசா' படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை அவர் அண்மையில் முடித்திருந்தார். படப்பிடிப்பின்போது காயம் இதற்கிடையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த படப்பிடிப்பின்போது நடன மாடிக்கொண்டிருந்த ராஷ்மிகா தவறி கீழே விழுந்ததில் தொடை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. தசைநார் கிழிவு பிரச்சினையால் அவர் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இனி மிஷின் போல இயங்குவது தவறு. தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்கு கொடுத்த கட்டாய ஓய்வு' என்று ராஷ்மிகா தெரிவித்திருந்தார். பிசியான நாட்களை 'மிஸ்' செய்கிறேன் தற்போது ஓய்வில் இருந்து வரும் ராஷ்மிகா, ஓய்வும் தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “வீட்டிலேயே என் பொழுதுகள் கடந்து செல்கின்றன. கட்டாய ஓய்வும் கவலையளிக்கவே செய்கிறது. பிசியான நாட்களை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-miss-the-busy-days-rashmika-resting-due-to-injury




