பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடக்க விழாவிலேயே ஒரு அதிரடியான திருப்பமாக, அறிமுக நிகழ்ச்சி மேடையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. Bigg Boss 10 வழக்கமாக பிக் பாஸ் தொடக்க விழாவில் அனைத்துப் போட்டியாளர்களும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பிறகு நேராக பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை இந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், நடிகைகள் லட்சுமி பிரியா, ஷாத்திகா, ஷப்னம் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதன்படி, மேடையில் இருந்தபடியே பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அதிக வாக்குகளைப் பெற்ற லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். Bigg Boss 10 இரண்டாவதாக அதிக வாக்குகளைப் பெற்ற ஷாத்திகா உள்ளே செல்ல ஷப்னம் குறைவான வாக்குகளைப் பெற்று அறிமுக மேடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். Bigg Boss Tamil 10: "என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் பெருசா பார்த்ததில்ல" - குமரன் பேட்டி | Exclusive முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/television/bigg-boss-tamil-season-10-started




