சென்னை, கடந்த 7ந் தேதி வெளியான டிசி படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடிகராக கவனம் ஈர்க்கும் லோகேஷ் இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் லோகேஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 15 நாட்களில் ரூ.100 கோடி வசூல் இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், ‘டிசி’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-kanagarajs-dc-joins-the-100-crore-club




