சென்னை, 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், அரசியல், மதம் மற்றும் ஜாதி அமைப்புக்களின் கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 'ரீல்ஸ்' சர்ச்சை தமிழகத்தில், அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளில், த.வெ.க., நிர்வாகிகள் 'ரீல்ஸ்' எடுப்பது சர்ச்சையானது. இதை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் எந்த கட்சியினரும் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகத்தில், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், ஜாதி சங்கங்கள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் சார்பில் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களிலும், இது பொருந்தும். எந்த காரணத்தை கொண்டும், பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது. முற்றிலும் தடை அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த வேண்டும். பள்ளி சுவர் மற்றும் வளாகத்தில், அரசியல், மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள், சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள், அரசாணையை மீறி, அரசியல், மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-warns-against-holding-religious-events-in-schools




