கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு கிடங்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில், வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் பி.வெங்கட்ரமணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளிடம் ஏதேனும் லஞ்சம் வாங்கப்படுகிறதா என விசாரித்தார். இதற்கு நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். உடனே, அங்கிருந்து விவசாயிகளின் நெல் வருகை பதிவேடுகளை எடுத்து பார்வையிட்ட அமைச்சர், அதில் இருந்து ஒரு விவசாயின் செல்போன் எண்ணை எடுத்து அந்த விவசாயிடம் பேசினார். அப்போது அந்த விவசாயி நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். லஞ்சம் கேட்டது உறுதியானதையடுத்து நெல் கொள்முதல் நிலைய அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் பெற்றிருந்தால் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு கலெக்டரிடம் அறிவுறுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/bribe-from-farmers-minister-orders-suspension-of-employee




