பாலக்காடு, ஆற்றில் பிணம் கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண் மற்றும் சிறுமி உடல்கள் கிடந்தன. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரோனிதா(வயது 35) மற்றும் அவரது மகள் ஜோஹிதா(4) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை கொலை செய்தது அவர்களுடன் அட்டப்பாடியில் தங்கி இருந்த பிரவோத் தாஸ்(37) என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் அவர் தலைமறைவாகி மேற்கு வங்கத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கள்ளக்காதல் இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து பாலக்காட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, பிரவோத் தாசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பிளைவுட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரது மனைவி யான பிரோனிதாவுடன் பிரவோத் தாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிரோனிதாவுக்கு ஜோஹிதா என்ற மகள் இருந்தாள். பிரோனிதாவும், பிரவோத் தாசும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் பிரவோத் தாஸ் பிரோனிதாவை குழந்தையுடன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிக்கு அழைத்து வந்தார். இங்கு பிரவோத் தாஸ் அவர்களுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். கோர்ட்டில் ஆஜர் இதற்கிடையில் பிரோனிதா கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து உள்ளனர். அதில் கர்ப்பம் உறுதியாகவில்லை. இது தொடர்பாக சம்பவத்தன்று வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவோத் தாஸ் கத்தியால் வெட்டி தாய்-மகளை கொலை செய்தார். பின்னர் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டி அங்குள்ள பவானி ஆற்றில் வீசிவிட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரவோத் தாசை அட்டப்பாடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/bodies-recovered-from-a-sack-illicit-lover-arrested-in-mother-daughter-murder-case




