தூத்துக்குடி, மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக தூத்துக்குடியில் இன்று, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:- இருமொழி கொள்கை திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தெளிவாக சொல்லி வருவது இருமொழி கொள்கைதான். ஏனெனில், மொழி கொள்கை எந்த குழந்தைகள் மீதும் பாரமாக மாறிவிடக்கூடாது, பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் நிச்சயமாக கற்றுக்கொள்ள இன்றைய உலகில் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. மும்மொழி கொள்கை கட்டாயம் மேலும், பல மொழிகளை கற்றுக்கொள்ள வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் பாடத்திட்டத்தோடு குழந்தைகள் மீது சுமையாக மொழியை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த அனைத்து வழிமுறையையும் கையாண்டு வருகிறது. மும்மொழி கொள்கை கட்டாயம் என்று வலியுறுத்தி குழந்தைகள் மனதிலே ஒரு அவநம்பிக்கையை உருவாக்க கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்ற கழகம் சொல்கிறது. இது குழந்தைகளுக்கு கற்றலில் மனச்சோர்வை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துவிடும். எதிர்பார்ப்பதே தவறு முன்னதாக த.வெ.க அரசு ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்து பேசவேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பதே தவறு என்றார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-partys-stance-is-not-to-raise-a-voice-against-the-central-government-mp-kanimozhi




