காந்திநகர், குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் ஆசியராக வேலை செய்து வருபவர் ஹரேஷ்கிரி கோஸ்வாமி. இவர் அந்த பகுதியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹரேஷ்கிரி கோஸ்வாமி தன்னிடம் பயிலும் 7-ம் வகுப்பு மாணவர் ஒருவரை மது வாங்க அனுப்பி வைத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரேஷ்கிரி கோஸ்வாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஹரேஷ்கிரி கோஸ்வாமியை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், மாநில கல்வித்துறை மந்திரி பிரத்யுமான் வாஜா, சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/teacher-arrested-in-gujarat-for-sending-a-7th-grade-student-to-buy-alcohol




