நகோயா, ஆசிய விளையாட்டு பெண்கள் டி20 அரையிறுதியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. ஆசிய விளையாட்டு போட்டிகள் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கிரிக்கெட் இதனிடையே, ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 அணிகள் மோதின. இதில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. பாகிஸ்தான் - இலங்கை ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதி வருகின்றன. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் 177 ரன்கள் இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆயிஷா ஷபார் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-semi-final-pakistan-177-runs




