திருவொற்றியூர், திருவொற்றியூர், கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 25). சவுதி அரேபியாவில் வெல்டிங் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். விபத்து இந்த நிலையில் நேற்று இரவு அவரும் நண்பரான சக்தி நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மணலி விரைவுச்சாலையில் எண்ணூர் நோக்கி சென்றனர். வி.பி.நகர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருளில் நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த ராஜ்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்குன்றம் - போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-motorcycle-hits-lorry-near-manali




