டுப்லின், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 ஆப்கானிஸ்தான் முன்னிலை அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 10ம் தேதி நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல் இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் இமாலய ரன் குவிப்பு இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் சித்திகுல்லா அடல், இப்ராகிம் சதம் விளாசினர். இப்ராகிம் 107 ரன்களும், சித்திகுல்லா அடல் 107 ரன்களும் குவித்தனர். 344 ரன்கள் இலக்கு அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் மெக்டொனாப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹவின் ஹானி, மார் அதிர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நோக்கி அயர்லாந்து களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/afghanistan-sets-himalayan-target-for-ireland-in-4th-odi




