சென்னை, சென்னை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது - சென்னை கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார். உலக இளைஞர் திறன் நாள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம்மூலமாக இளையதலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஜுலை மாதம் இரண்டாவது வாரத்தில் (09.07.2026 முதல் 10.07.2026 மற்றும் 13.07.2026 முதல் 15.07.2026 வரை ) தொழில் நெறிவிழிப்புணர்வு மற்றும் திறன் வாரமும், 15.07.2026 அன்று உலக இளைஞர் திறன் நாளும் கொண்டாடப்படுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சி இதன் படி 09.07.2026 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நெறிவிழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் 10.07.2026 அன்று மகளிர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெண்கல்வி, பெண்முன்னேற்றத்திற்கான தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி 13.07.2026 அன்று பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டி நிகழ்ச்சிகள் மற்றும் உளஅளவியல் சோதனை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 14.07.2026 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 15.07.2026 அன்று அரசினர் தொழிற் பயிற்சிநிலைய மாணவ மாணவியர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான சுய வேலைவாய்ப்பு / தொழிற்பழகுநர் பயிற்சி/ தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மாணவ மாணவியருக்கு பரிசுகள் மேலும் தன்னார்வ பயிலும் வட்டம், மெய்நிகர் கற்றல் வலைதளம், தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம், கல்வித் தொலைகாட்சி, மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் YOU TUBE CHANNEL மற்றும் TN CAREER SERVICES வலைதளம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 15.07.2026 உலக இளைஞர்திறன் நாள் அன்று நடத்தப்படும் விழாவில் கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் சென்னை கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/employment-awareness-program-for-youth-chennai-collectors-announcement




