சேலம், கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை. மக்களின் பிரச்சனைக்காக எந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தால் கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என்று விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; தவெக அட்சிக்கு வந்த பிறகு, சிறு குறு விவசாயிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விவசாயிகள் வருமானம் இல்லமால் இருக்கிறரார்கள். மேகதாது விவகாரத்தில் மெத்தனம் இல்லாமல், அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்தே மூன்று ஆண்டுக்ள்தான் ஆகிறது. எந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். எதோ கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள். வாய்ப்பு கிடைத்த பிறகு மற்ற கட்சிகள் சொல்வதை கேக்க வேண்டும். காவிரி பிரச்சினை பற்றி இவருக்கு ஒன்னுமே தெரியவில்லை. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காலம் தாழ்த்திதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். கர்நாடகா உபரி நீரைத்தான் திறக்கிறது. தவெகவிற்கு எதைப்பற்றியுமே தெரியவில்லை. மக்கள் சொல்வதையாவது கேக்க வேண்டும். எதையுமே செயல்படுத்தாத முதல்வராக மவுன முதல்வராக விஜய் உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/posting-reels-and-spinning-yarnsthats-the-only-achievement-edappadi-palaniswami-criticizes-the-tvk-government




