இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் இன்று அதிகாலை 4.15 மணியளவில் (பிரம்ம முகூர்த்தத்தில்) அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் ‘ராமாயணா’ வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் இசை இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெய்லருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் கசிவு முன்னதாக, புதுடெல்லியில் நடைபெற்ற 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான்டியாகோ காமிக்-கான் விழாவில் திரையிடப்பட்ட டிரெய்லரின் சில முக்கிய காட்சிகள் செல்போனில் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்தன. சுமார் ஒரு முதல் இரண்டு நிமிடங்கள் வரையிலான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியதால், பல மாத உழைப்பில் உருவான காட்சிகள் இவ்வாறு வெளியானது தவறு என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கருத்து தெரிவித்தனர். காப்புரிமை நடவடிக்கையில் படக்குழு லீக்கான வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க படக்குழு உடனடியாக காப்புரிமை (Copyright) நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை நீக்குவதற்காக 'காப்பிரைட் ஸ்டிரைக்' உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான அதிகாரப்பூர்வ டிரெய்லர் இந்த நிலையில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் (பிரம்ம முகூர்த்தத்தில்) படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/trailer-of-the-movie-ramayana-released-during-the-auspicious-brahma-muhurtham-fans-excited




