'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டீசர் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் அதிகமான வன்முறை, நிர்வாண காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யாஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளார். இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற 26-ம் தேதி 'டாக்ஸிக்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yash-starrer-toxic-movie-trailer-released




