செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜமைக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜமைக்கா வெற்றி இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ட்ரின்பகோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா 14.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி ட்ரின்பகோ 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜமைக்கா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-jamaica-stun-trinbago-2




