ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்ட “ராம் அண்ட் லீலா” ரியோ ராஜ், ‘ராம் அண்ட் லீலா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இந்த படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் கலந்த பொழுதுபோக்கு கதையுடன் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டிரெய்லர் வெளியானது ‘ராம் அண்ட் லீலா’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. காதல், காமெடி கதைக்களத்தில் வெளியான இந்த டிரெய்லர் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. படத்தின் பெயர் மாற்றம் ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயரை மாற்ற தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. ‘ராம் இன் லீலா’ என்ற பெயர் இந்து மதக் கடவுளைக் குறிக்கும் விதத்தில் இருப்பதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. தணிக்கை சான்றிதழ் இந்த நிலையில், ‘ராம் இன் லீலா’ என்ற பெயரை ‘ராம் அண்ட் லீலா’ என பெயர் மாற்றம் செய்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு! ⚡ Catch the energy on the big screen this August 21! ️@rio_raj — Rio raj (@rio_raj) August 18, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rio-rajs-ram-and-leela-film-gets-ua-censor-certificate




