சென்னை, ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பிக்பாஸ்’ சீசன் 10 தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8 மற்றும் 9-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 10வது சீசன் துவங்க இருக்கிறது. தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது. பிரம்மாண்ட தொடக்க விழா பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. ஆண் போட்டியாளர்களின் பட்டியல் வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, சின்னத்திரை நடிகர் நவீன் குமார், ஆர்யன், வினோத் பாபு, புவியரசு, குரேஷி. பார்கவ் ராம், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்டோர் இந்த சீசனில் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தப் பெயர்கள் யூகங்களாக மட்டுமே கருதப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/bigg-boss-season-10-list-of-male-contestants-goes-viral-online



