இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வை அறிவிக்காமல், குறைந்த விலைத் திட்டங்களை ரத்து செய்வதன் மூலம் மறைமுகமாக ரீசார்ஜ் செலவை உயர்த்தியுள்ளது ஏர்டெல். ஏர்டெல் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தினமும் 1.5GB டேட்டாவை 28 நாள்களுக்கு வழங்கி வந்த ரூ.299 திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ரூ.579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய இடைநிலை ப்ரீபெய்ட் திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. இதனால், ரூ. 299 திட்டத்தைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி நேரடியாக ரூ.349 திட்டத்திற்கு மாற வேண்டும். இதன் மூலம் அதே 28 நாள்களுக்குக் கூடுதல் 0.5GB டேட்டாவுடன் தினமும் 2GB டேட்டாவைப் பெறலாம் என்றாலும், மாதத்திற்கு ரூ.50 கூடுதலாகச் செலவிட நேரிடும். airtel அதேநேரத்தில் தினமும் 3GB டேட்டா விரும்பும் பயனர்களுக்காக 28 நாள்கள் வேலிடிட்டியுடன் ரூ.399 திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் குறைந்தபட்ச வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான ரூ.199 அடிப்படைத் திட்டம் எந்த மாற்றமுமின்றித் தொடர்ந்து கிடைக்கிறது. நேரடிக் கட்டண உயர்வைத் தவிர்க்கவே ஏர்டெல் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் இறுதியில் தொலைத்தொடர்புத் துறையில் 12% முதல் 15% வரை பொதுவான கட்டண உயர்வு இருக்கக்கூடும் எனச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/technology/airtel-discontinued-popular-monthly-prepaid-plans




