திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2 பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, தொடர்ந்து அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முன்னதாக செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன வீதிஉலாக்கள் நடக்கின்றன. கொடியேற்றம் செப்டம்பர் 15-ந்தேதி மாலை கருட கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை 8 மணிக்கு சின்ன சேஷ வாகன வீதிஉலா. மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை 8 மணிக்கு சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை 8 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது. கருட சேவை 19-ந்தேதி காலை 8 மணிக்கு மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை 'சிகர' நிகழ்ச்சியாக கருட வாகன வீதிஉலா. 20-ந்தேதி காலை 8 மணிக்கு அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணிக்கு தங்கத்தேரோட்டம், இரவு 7 மணிக்கு கஜ வாகன வீதிஉலா. 21-ந்தேதி காலை 8 மணிக்கு சூரியபிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா, 22-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம். இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 23-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/annual-brahmotsavam-festival-at-tirupati-ezhumalaiyan-temple-begins-with-flag-hoisting-on-september-15




