தஞ்சை, தஞ்சை மாவட்டத்தின் பின்வரும் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு; மின்நிறுத்தம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி கள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, கொல்லாங்கரை, சாமிப் பட்டி, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், வாண்டையார் இருப்பு, காட்டூர், புதூர், மேலஉளூர், கீழஉளூர், கோவிலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகு திகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மாரியம்மன்கோவில், ஞானம்நகர், தளவாய்பாளையம், மகேஷ்நகர், புதுப்பட்டினம், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லி தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கோரிகுளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகர், தில்லைநகர், எடவாக்குடி, கீழ வஸ்தாசாவடி, அம்மாகுளம், சந்தானம் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர், சூரக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-thanjavur-facing-power-outages-tomorrow-and-the-day-after




