சென்னை, தமிழக சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டம் தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். 4 நாட்கள் விடுமுறை அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் கிடையாது. மறுநாள் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை வருகிறது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை விவாதம் அடுத்து வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது. முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/four-day-break-for-the-legislative-assembly-debate-on-demands-for-grants-on-the-17th




