சென்னை, சென்னை சிந்தாதிரிபேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார். அவரிடம், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டிருப்பது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதில் அளிக்கையில், "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறேன். அங்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்சினையில் த.வெ.க. அரசு எடுக்கும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை என்ன என்பதை செயலில் காட்டுவோம்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-arrest-issue-minister-srinath-to-travel-to-delhi-the-day-after-tomorrow-to-meet-the-union-minister




