நியூயார்க், 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 48 அணிகளாக உயர்வு உலகக் கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்றன. அதன்பிறகு போட்டியின் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் அணிகளின் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்த பிபா முடிவு செய்தது. அதன்படி தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்றன. 64 அணிகளாக அதிகரிக்கப்படுமா? இந்த நிலையில், 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்த பிபா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமான (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ கூறுகையில், "தற்போதைய உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகு, 2030 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்துவது குறித்து பிபாவின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/will-the-2030-world-cup-expand-to-64-teams-what-fifas-infantino-says




