மான்செஸ்டர், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இறுதியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்த வெற்றியால் இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச டி20 ச போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிகரமாக எட்டிய அதிகபட்ச இலக்கு 191 ஆகும்; 2012-ல் வான்கடேவில் 178 ரன்கள் என்ற இலக்கை எட்டி பிடித்தது தான் இங்கிலாந்து அணியின் அதிகமாட்சமாக இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/victory-against-india-englands-record-breaking-feat




