டில்லி, வங்கிகளின் வேலை நாட்களை வாரத்துக்கு ஐந்து நாட்களாக குறைப்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான. யு.எப்.பி.யு., அழைப்பு விடுத்து உள்ளது. வங்கிகள் போராட்டம் அறிவிப்பு வங்கி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து, மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில், நேற்று நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுத்தன. அதற்குப் பதிலளித்த தொழிற்சங்கங்கள், ஐந்து நாள் வங்கிப்பணி கோரிக்கை குறித்து அரசு சாதகமான முடிவு அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை விடுவது பற்றி பரிசீலிக்கப்படும் வட்டமாக தெரிவித்தது. வரும் 28க்கு முன் வார இறுதி விடுமுறை வருவதால் இந்த போராட்டத்தால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிச்சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் 30 ம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பணப்பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கும். ஓய்வூதியம் புதுப்பித்தல், பழைய ஓய்வூகிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவையும் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. வேலைநிறுத்தம் நடந்தால் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மற்றும் ஏ.டி.எம். சேவைகளை பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/banks-announce-three-day-nationwide-strike-to-reduce-working-days




